விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கர்ணாவூர் பேட்டை அருகே காரட், பீட்ரூட் ஆகியவற்றை ஏற்றி கொண்டு சரக்கு லாரி கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி டிரைவர் முன்னால் சென்ற கூரியர் லாரியை முந்தி செல்ல முயன்றார். இதனால் காய்கறி லோடு ஏற்றி சென்ற லாரி கூரியர் லாரி மீது மோதியது.

இதனால்  கூரியர் லாரி தடுப்புக்கட்டையில் ஏறி எதிர் திசையில் வந்த அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.