தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.

அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட குழு தற்போது ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டிரைலர் வெளியாக இன்னும் 3 தினங்கள் இருக்கிறது என்று கூறி ‌ வந்தியத்தேவனின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது