பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கனகா ஹீரோயினாக நடிக்க செந்தில், கவுண்டமணி, கோவை சரளா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் காமெடி போன்றவைகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கரகாட்டகாரன் திரைப்படத்தை கங்கை அமரன் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது 36 வருடங்களுக்குப் பிறகு கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட் பிரபு கரகாட்டக்காரன் 2 படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறாராம். அதன் பிறகு கோவை சரளா, கவுண்டமணி மற்றும் செந்தில் போன்றோர் கெஸ்ட் ரோலில் கரகாட்டக்காரன் 2 படத்தில் வருவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.