பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நடிகை ஆலியா பட் கடந்த வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்திருந்தாலும் ஜூனியர் என்டிஆருடன் இருக்கும் காட்சிகள் தான் அதிகம்.

இதனால் ஜூனியர் என்டிஆர் உடன் ஆலியா பட் நட்புடன் பழகி வந்த நிலையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ஜூனியர் என்டிஆரின் மகன்களான அபய் மற்றும் பார்க்கவா ஆகியோருக்கு தன்னுடைய சொந்த பிராண்ட் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட ஆடையை ஆலியா பட் பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆடைகளை தன்னுடைய மகன்கள் அணிந்து கொண்ட பிறகு அவர்களுடன் சேர்ந்து ஜூனியர் என்டிஆர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் நடிகை ஆலியா பட்டுக்கு நன்றி தெரிவித்ததோடு இதே போன்ற ஒரு பரிசு எனக்கு எப்போது வரும் என்றும் பதிவிட்டுள்ளார்.