இயற்கையின் அழகும் ஆன்மீக நம்பிக்கைகளும் நிறைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், மனித அறிவிற்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறி வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோக்னி மாதா கோவில் வளாகத்தில், தினமும் ஒரு மர்மமான ஆடு தோன்றி மக்களுக்கு தரிசனம் தருவதாகக் கூறப்படும் செய்தி தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.
அந்த மலைப்பகுதியில் திடீரெனக் காட்சியளிக்கும் அந்த ஆடு, வழக்கமான மிருகங்களைப் போல இல்லாமல் மிகவும் சாந்தமாகவும் தெய்வீகக் களையுடனும் இருப்பதாக அங்கு செல்லும் பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கூறுகிறார்கள். இந்த விசித்திர நிகழ்வைக் காணவே தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த கோவில் பகுதிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
ஆனால், இந்த சம்பவத்தில் அனைவரையும் உரைய வைக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆட்டை தூரத்திலிருந்து பார்க்கும் வரை மட்டுமே அது அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது. அதை நேரில் தொட்டுப் பார்க்கவோ அல்லது அதன் அருகில் செல்லவோ யாராவது முயன்றால், அந்த ஆடு அடுத்த சில வினாடிகளிலேயே யாருடைய கண்ணிலும் படாமல் காற்றில் கரைவது போல மாயமாக மறைந்துவிடுகிறதாம்.
மேலும் “நாங்கள் எவ்வளவோ தடவை அதை நெருங்கப் பார்த்தோம், ஆனால் கண் இமைக்கும் நேரத்திற்குள் அது எங்கே போனது என்றே தெரியவில்லை” என உள்ளூர் மக்கள் மற்றும் நேரில் பார்த்த பக்தர்கள் பெரும் வியப்புடன் தெரிவிக்கின்றனர். இந்த மாய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆன்மீக அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையவாசிகளிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு சாரார் இது ஜோக்னி மாதா அம்மனின் அற்புதம்தான் என்றும், அம்மனே ஆட்டின் உருவில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவதாகவும் தீவிரமாக நம்புகின்றனர்.
மறுபுறம் அறிவியல் ஆர்வலர்களும் சில நெட்டிசன்களும், அடர்ந்த மலைப்பகுதியில் வெளிச்சம் மற்றும் நிழல் காரணமாக ஏற்படும் மாயத்தோற்றமாக இது இருக்கலாம் அல்லது இது வெறும் வீடியோ எடிட்டிங் வேலையாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் இணையவாசிகளின் சந்தேகத்தையும் ஒருசேரக் கிளறிவிட்ட இந்த மாய ஆட்டின் ரகசியம், இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
📍 Kullu — A goat at Jogni Mata Temple in Jhiri has become an unusual attraction. 🐐
The goat is reportedly seen offering what appears to be darshan near the temple, drawing crowds of curious devotees and visitors every day.
This sight has certainly caught everyone’s attention! pic.twitter.com/eXgZaOSPIU
— The Modern Himachal (@themodernhp) August 9, 2026
“>
