தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து நகைகளை திருடியுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஈஸ்வரியின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈஸ்வரிக்கு ஐஸ்வர்யா மாதம் 30,000 சம்பளம் கொடுத்துள்ளார். இந்த சம்பளம் குடும்பத்தை கவனித்துக் கொள்ள போதாததால் ஐஸ்வர்யா வீட்டில் சிறிய சிறிய திருட்டில் ஈடுபட்டுள்ளார் ஈஸ்வரி. இதை அவர்கள் கவனிக்காததால் லாக்கர் சாவி தன்னிடம் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரி நகைகளை திருடியுள்ளார். இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தால் அனைத்து நகைகளையும் திருடியிருப்பேன். மாடாக உழைத்து அவர்கள் குறைவான சம்பளம்தான் கொடுத்தார்கள் என ஈஸ்வரி கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளை விற்பனை செய்து சுமார் ஒரு கோடி மதிப்பில் ஈஸ்வரி சொகுசு வீடு வாங்கியதோடு, அவரின் கணவரிடம் நான் ஐஸ்வர்யாவின் பினாமி. வீடு அவருடையது தான் என்று கூறியுள்ளார். இதனால் ஈஸ்வரியின் கணவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 பவுன் நகைகள் காணாமல் போனதாக புகார் கொடுத்திருந்த நிலையில் ஈஸ்வரி அடகு வைத்ததாக சொல்லப்படும் கடையில் இருந்து 110 பவுன் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவைகள் மீட்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஈஸ்வரியிடமிருந்து சொத்து பத்திரங்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.