லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் பாபு ஆண்டனி உட்பட பலர் நடிக்கின்றனர். லியோ படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் லியோ படத்தில் பகத் பாசிலும் இணைந்து உள்ளார். இப்படத்தில் பகத் பாசில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் வாயிலாக லியோ படமும் கண்டிப்பாக LCU-ல் (lokesh cinematic universe)-ல் இணையும் என தெரியவந்துள்ளது.