Airtel 5G  நெட்வொர்க் 3,000-க்கும் அதிகமான நகரங்களில் கிடைக்கும். இலவச அன்லிமிடெட் 5G நெட்வொர்க்கை அனுபவிக்க வேண்டுமெனில் பயனாளர்கள் ரூ.249 (அ) அதற்கு மேற்பட்ட திட்டத்துக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை பெற ஏர்டெல் தேங்ஸ் செயலியை பார்க்கவும்.

அன்லிமிடெட் 5G டேட்டா ஆஃபரைப் பெறும் முன் உங்களிடம் ரூ.239 (அ) அதற்கு மேல் ரீசார்ஜ் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது ஸ்மார்ட்போனில் Airtel தேங்ஸ் செயலியை திறக்க வேண்டும். அந்த ஆப்ஸ் இல்லையெனில் கூகுள் ப்ளே ஸ்டோர் (அ) ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்யவும்.

திரையின் முகப்பு பக்கத்தில் உங்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை க்ளெய்ம் செய்யுங்கள் என ஒரு பேனர் காட்டப்படும். சலுகையின் விபரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை காட்டும் பக்கத்துக்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள். இந்த செயல்முறை முடிந்தவுடன் உங்களது அன்லிமிடெட் 5G டேட்டா ஆஃபரை வெற்றிகரமாக பெற்றுள்ளீர்கள்’ என்ற செய்தி காட்டப்படும்.