பொதுவாக செல்போன்களுக்கு மட்டும்தான் பவர் பேங்க் சார்ஜர் உண்டு. நாம் வெளியிடங்களுக்கு செல்லும்போது பவர் பேங்க் எடுத்துச் சென்றால் செல்போன்களில் சார்ஜ் இல்லாவிட்டாலும் அதன் மூலம் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இந்நிலையில் தற்போது லேப்டாப்புக்கும் பவர் பேங்க் சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆம்பிரான் என்ற நிறுவனம் பவர்லிட் அல்ட்ரா மற்றும் ஆம்பிரான் பவர்லிட் பூஸ்ட் பவர் என்ற இரு டிவைஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளியூர்களுக்கு செல்லும்போது பவர் பேங்க் எடுத்துச் சென்றால் லேப்டாப்புக்கும் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். மேக் புக் & சி டைப் போர்ட் கொண்ட லேப்டாப்புகளுக்கு மட்டும் தான் பவர் பேங்க் சார்ஜர் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. மேலும் இந்த பவர் பேங்க் சார்ஜர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.