நமது மொபைல் எண்ணுக்கு வரும் தேவையில்லாத, மோசடி அழைப்புகளில் இருந்து உஷாராக இருக்க True Caller செயலி நமக்கு பெரிதும் உதவி வருகிறது. இந்நிலையில், ஸ்பேம் அழைப்புகள் மூலம் பரவும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, True Callerன் சேவை இனி வாட்ஸ்அப்பிலும் கிடைக்க உள்ளது. தற்போது பீட்டா பதிப்பில் உள்ள இச்சேவை, இம்மாத இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்குஇந்த  ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது.