டெல்லியில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நதீம் என்பவர், தவறுதலாக வேறு ஒரு முக்கிய ரத்த நாளத்தை (Vein) வெட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டு, அந்தப் பெண் மருத்துவரிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று நியாயம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மருத்துவர் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், “எல்லாம் அல்லாஹ்வின் விருப்பப்படிதான் நடந்துள்ளது” என்று மிகவும் அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) முன்னிலையிலேயே அந்த மருத்துவரிடம், “ஒருவேளை இந்தத் தவறான சிகிச்சையால் நான் இறந்திருந்தால் என்னவாகியிருக்கும்?” என்று மிக ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
🚨 SHOCKER! Delhi Doctor Nadeem cuts wrong vein during surgery, tells patient: "It's Allah's will."
When asked what if she had died? He repeats: "Allah's will."
— Religious arrogance in the operation theatre? This is unacceptable. pic.twitter.com/ZwjzSeVFCs
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 24, 2026
அதற்கும்கூட அந்த மருத்துவர் சற்றும் அசராமல், “நீ இறந்திருந்தாலும் அது அல்லாஹ்வின் விருப்பமாகத்தான் இருந்திருக்குமே தவிர, எங்கள் பக்கத்து தவறு கிடையாது” என்று பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். இந்த ஒட்டுமொத்த கொடூர சம்பவத்தையும், மருத்துவரின் அலட்சியத்தையும் விவரித்து பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, காட்டுத்தீயாய் பரவி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
