தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  இந்தியாவிலேயே மோசமான….  most backward  ( மிகவும் பின்தங்கிய) புண்டில்கன் பூர்வாஞ்சல் பகுதி. மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கு. இப்போ வளர்ந்துக்கிட்டு இருக்கு.  உத்தரபிரதேசம் மாநிலம் புண்டில்கன்டுக்கும், பூர்வாஞ்சலுக்கும்  போன இன்வெஸ்டர் மீட்ல மட்டுமே ஒன்பது லட்சம் கோடி. நீ திராவிட மாடல்ல அரசு என  டயலாக் விட்டுட்டு இருக்க….  முழு தமிழ்நாட்டுக்கு சேர்த்து 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வாங்கி இருக்கிற….

உத்தரப்பிரதேசம் ஒட்டுமொத்தம் 33 லட்சம் கோடில மோஸ்ட் பேக்வேர்ட் ரீஜனல் ஆப் இந்தியாவாக இருந்து வளர்ந்து கொண்டிருக்க கூடிய புண்டில்கன்டு,  பூர்வாஞ்சலுக்கு 9 லட்சம் கோடி ரூபாய். அப்பறம் இன்னொன்னு நம்ம தலைவர்கள் எல்லாம் சொன்னாங்க மேடையில் இருக்குறவுங்க குஜராத்ல பார்த்தீர்கள் என்றால் 10, 11, 12 இன்வெஸ்டர்ஸ் மீட். இங்க வந்தவங்க அப்படியே குஜராத் போறாங்க.

குஜராத்தினுடைய பாரதிய ஜனதா கட்சி அரசு தலைமையில் குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் இன்னைக்கு சாயந்திரம் முடிவுக்கு வருது. குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் நடப்பதற்கு முன்பே கிரிக்கெட் மேட்ச் விளையாட போறதுக்கு இரண்டு நாட்கள் முன்னாடி பேட்ஸ்மேன் கிளவுஸ் எல்லாம் போட்டு வார்ம் அப் எல்லாம் பண்ணுவாங்க… அதுல குஜராத் வாங்கி அமவுண்ட் மட்டுமே 7,10,000 கோடி. வார்ம் அப் ரவுண்டு. இன்னும் மெயின் ரவுண்டு வரல. மெயின் ரவுண்டு இன்றைக்கு தான் முடியுது. என்னையா பேசுற…

தமிழ்நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து,  ஒரு மழைக்கு  சென்னை தாங்காது என்கின்ற பிம்பத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி,  வடக்கிலிருந்து யாராவது வந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திமுககாரன் சொல்லி திட்டிகிட்டு….  எப்படி தமிழ்நாட்டிற்கு  இன்வெஸ்ட்மென்ட் வரும் ? எப்படி வரும் ஐயா ? 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி என்பது தமிழ்நாடு போல முழு தகுதி இருக்கக்கூடிய மாநிலத்திலிருந்து மிக மிக குறைவாக வந்த ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆகும். மிகக் குறைவா வந்த இன்வெஸ்ட்மென்ட்.

உத்தரபிரதேசம் 33 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் அதைவிட அதிக காலேஜஸ்,  எம்பிளாய்மெண்ட் ஆப்பர்சூனிட்டி,  எஜுகேஷன் பேஸ்  எல்லாம் இருக்கும்போது குறைந்தபட்சம்…. நாம சொன்னது குறைந்தபட்சம் 10 லட்சம் கோடியாவது வந்தா தான் இத பத்தி பேசலாம். 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி வந்துட்டு பேசுறாங்க. இந்த மாதிரி பொய்யை சொல்லி திமுககாரன் பேசுவதை எல்லாம் நீங்க  அப்பப்ப  உடைச்சிடனும். அந்த டாப்பிக்கை அப்பப்ப உடச்சு தூக்கி வீசிடனும் என தெரிவித்தார்.