தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட உள்ளார். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட உள்ளனர்.