செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் மீது எப்போது ரெய்டு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால்,  இன்று அரசாங்கத்தினுடைய வேலைகளை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தாங்கள் துறைகளிலே முழுமையான கவனத்தை செலுத்துகின்ற சூழலில்… இன்றைய அமைச்சரவை இல்லை.

தமிழகத்தினுடைய முதல்வரும் இல்லை. அரசாங்கத்தில் என்னென்ன முடிவுகள் எல்லாம் எடுக்கிறார்களோ,  அதை மாநிலத்தினுடைய முதல்வர் மாற்ற வேண்டிய சூழ்நிலையில்தான் இன்று அவர் இருக்கிறார். காய்ச்சல் உடைய பாதிப்பு தமிழகம்  முழுக்க மிக மோசமாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நபர்கள் டெங்கு மாதிரியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். காய்ச்சல் முகாம் நடத்துவது மக்களுக்கு தெரியவில்லை. அது தொடர்பான தகவல்கள் சரியாக கிடைக்க மாட்டேங்குது. இன்னொரு புறம் ஏன் காய்ச்சல் வருதுன்னா….

குப்பையை ஒழுங்கா எடுக்கறது இல்ல…. கொசுக்கள் ஜாஸ்தியாக இருக்கு. வெறுமனே காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கிறோம்… முகாம் நடத்துவது மட்டும் போதாது….. உள்ளாட்சி நிர்வாகம் எல்லா இடங்களிலும் மழைநீர் தேங்கியுவதையும்,  குப்பை தேங்குவதையும் உடனடியாக சரி செய்தால் மட்டுமே காய்ச்சலுடைய பாதிப்பை குறைக்க முடியும் என தெரிவித்தார்.