ஆஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்த ஆற்றில் குதித்த சிறுமியை சுறா மீன் கடித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஸ்வா நதி உள்ளது. மிகவும் ஆழமாக அழகாக காட்சியளிக்கும் அந்த நதியில் பொழுதுபோக்குக்காக படகு சவாரி செய்வதும் ஜெட் கீ எனப்படும் வாகனத்தில் பயணிப்பது வழக்கமாகும்.

இந்நிலையில் ஸ்வா நதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் ஜெட் கீ-யில் பயணித்துக் கொண்டிருந்தபோது டால்பின்களுடன் நீந்த ஆசைப்பட்ட அவர் நதியில் குதித்துள்ளார். அப்போது பாய்ந்து வந்த சுறா ஒன்று அச்சிறுமியை கடித்துள்ளது. பலத்த காயமடைந்த சிறுமியை மீட்பு குழுவினர் தண்ணீரில் இருந்து மீட்டு முதலுதவி அளித்து காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சிறுமி அவரின் தோழிகளின் கண் முன்னே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.