பாகிஸ்தானில் பிரபல தகவல் தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா உலகம் முழுவதும் அறியப்படும் இணைய தகவல் தளமாக உள்ளது. பல்வேறு நாடுகளின் பயனர்களும் இந்த தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் மத நம்பிக்கைகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை நீக்க தவறியதால் விக்கிபீடியா தளத்தை முடக்கி பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மத விவகாரங்களுக்கு எதிரான சட்டங்களை பாகிஸ்தான் அரசு அண்மையில் கடுமையாக்கியது. இஸ்லாம் மதத்தை குறித்தும் இஸ்லாமிய கடவுள்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பவர்களை தூக்கிலிடும் வகையில் இந்த சட்டங்கள் கடுமையாகப் பட்டன.

மேலும் இணைய நிறுவனங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை 48 மணி நேரத்திற்குள் நீக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானின் அறிவுறுத்தலை விக்கிபீடியா ஏற்க மறுத்த நிலையில் பாகிஸ்தானில் விக்கிபீடியா முடக்கப்பட்டுள்ளது.