அமெரிக்காவில் மவுண்டான மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகக்கும்படி பறந்து சென்றுள்ளது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று கூறிய அமெரிக்கா இந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சீனாவோ அது உளவு பலூன் அல்ல. வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய விண்ணோடம் என்றும் தவறுதலாக திசை மாறி அமெரிக்கா வான்வெளிக்குள் வந்துவிட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை அமைதியாகவும் பொறுமையாகவும் கையாள வேண்டும் என்று அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.