டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பனிப்பொழிவு காரணமாக டெக்சாஸில் ஏழு பேர் உட்பட தென் மாகாணங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் நியூ இங்கிலாந்து பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மைனஸ் 40 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் மைனே, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மாசசூசெட்ஸ், கனெக்டிகட், ரோட் தீவு ஆகிய இடங்கள் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் டென்னசி, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களிலும் கடுமையான பனி புயல் வீசி வருவதால் நகரங்கள் முழுவதும் சுமார் 3 அடி உயரத்திற்கு பனி மூடி காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பனி புயல் காரணமாக அமெரிக்காவில் 1500 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.