லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை சிகாகோவில் உள்ள ட்ரம்ப் கோபுரத்தின் உயரத்துடன் ஒப்பிட செய்யலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பெருங்குழியில் ராட்சத சுரங்கங்கள் மற்றும் குகைகள் உள்ளன.