சுமார் 317 கிலோ எடையுடன் இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன்(33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும் உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. இரண்டு சிறுநீரகங்களும் ஆரம்பத்திலேயே சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.