உக்ரைனுக்காக இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவியில் போயிங் வடிவமைத்த புதிய ஆயுதமான கிரௌண்ட் லான்ச் ஸ்மால் டயாமீட்டர் பாம் முதல் முறையாக பயன்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதத்தை பயன்படுத்தி 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கலாம். இதற்கு முன்னதாக ஏவப்பட்ட ஹிமாஸ் வகை ஏவுகணை மூலம் 80 கிலோமீட்டர் வரை மட்டுமே தாக்க முடியும்.

இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் போது ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என கூறப்படுகின்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச அரசியல் விமர்சகர்கள் நீண்ட தூரத்தில் இருக்கும் இலக்குகளை எளிதில் தாக்கும் தன்மை கொண்ட அமெரிக்கா ஆயுதங்களின் வருகை மேலும் மோதலை அதிகரிக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.