கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதற்கு 1008 சடங்குகள் இருக்கிறது என்று நாம் எண்ணுவோம். அதிலும் வரம் தேடுவது, பொருத்தம் பார்ப்பது, பெண்பார்க்க போவது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம், கல்யாணம் இதற்கிடையில் ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஆப்பிரிக்கா கண்டத்தில் இப்படி இல்லை. இவர்களின் பாரம்பரிய முறைகளே சற்று வினோதமாக இருக்கின்றன. என்னடா இப்படி ரக ரகமாக கல்யாணம் பண்றீங்க என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இவர்களின் ஒவ்வொரு செயல்களும் இருக்கின்றது.

அமெரிக்க நாடான நமீபியாவில் ஹிம்பா என்ற பழங்குடியினர் தான் வினோதமான வழக்கத்தை பின்பற்றுகின்றனர். இவர்களின் பலங்குடியின இனத்தில் உள்ள ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அந்த ஆணின் குடும்பத்தினர் மணப்பெண்ணை கடத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்களாம். அதன் பின்னர் திருமணம் செய்து வைப்பதாக சொல்லப்படுகின்றது. சற்று நினைத்துப் பாருங்கள். நம்மூரில் பையன் பெண்ணை கூட்டிக்கொண்டு போனாலே கடத்தல் வழக்கு போட்டு விடுவார்கள்.

ஆனால் இங்கே குடும்பமே சேர்ந்து கடத்துகிறது. அது மட்டுமல்லாமல் மணமகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பையும் போட்டு விடுவார்களாம். அதன் பிறகு மணமகன் குடும்பத்தினர் மணமகளின் வீட்டிற்குச் சென்று உங்கள் மகள் எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள் என்றும் திருமணம் செய்து தாருங்கள் என்று கேட்பார்களாம். இவ்வாறு கேட்பதால் திருமணம் நிராகரிக்கப்படும், சில சமயங்களில் பெண் வீட்டார்கள் ஏற்றுக் கொண்டால் கல்யாணம் நடக்கலாம்.

அப்படி நடந்தாலும் அடுத்து நடக்கும் சுவாரசிய சம்பவம் தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன கல்யாணம் தானே என்று நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. மணமகன் மணமகளோடு இருந்து கருவற்ற பின்னர் தான் இவர்களுக்கு திருமணத்தையே நடத்தி வைக்கிறார்களாம்.