கடந்த 2022 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 2021 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ராணியை கொல்வதற்காக அரசு இல்லத்திற்குள் ஒருவர் புகுந்த போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் இந்திய வம்சாவளையை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் சைல் தெரிய என்பது தெரியவந்துள்ளது. அவர்  ராணியை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தேன் என  விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக அவர் தன்னுடன் வில் அம்பு வடிவிலான ஆயுதம் ஒன்றை ஏந்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து ராணியை எதற்காக அவர் கொள்ள சென்றார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மனநல சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ இணைப்பு வழியில் லண்டன் நகரில் ஓல்ட் பெய்லி  கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். அதில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை அவர் ஒப்புக்கொண்டார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்பாக ஜஸ்வந்த் சிங் வீடியோ ஒன்றை பலருக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து இந்தியர்களுக்காகவும், பழிவாங்கும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.