தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2.24 லட்சம் குடும்பங்களுக்கும், திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ரேஷன் கார்டு தடையின்றி கிடைக்கும் என தெரிகிறது.
