அமெரிக்காவில் மவுண்டான மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகக்கும்படி பறந்து சென்றுள்ளது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று கூறிய அமெரிக்கா இந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதல் இது பறக்கும் போது சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாலும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதற்காக அந்த முயற்சியை கைவிட்டு விட்டு விட்டோம் என அமெரிக்கா ராணுவம் கூறியது. மேலும் இதன் இயக்கம் சார்ந்த தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்கபட்டன.

இதனை அடுத்து அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜோ பைடன் பேசியதாவது, கடந்த புதன்கிழமை சீனாவின் கண்காணிப்பு பலூன் பற்றி என்னிடம் விவரங்களை கூறினார்கள். அதனை முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுட்டு தள்ளும்படி ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டேன். அவர்கள் அதனை சுட்டு வீழ்த்தி விட்டனர்.

யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்து எங்கள் நாட்டில் இருந்து 12 மைல் எல்லைக்குள் நீரின் மேற்பரப்பில் வந்த போது அதனை வீழ்த்த முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அதற்காக அதனை செய்து முடித்த விமானிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று ஜோபேடன் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு கடற்கரையில் இருந்த பலூனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.