மதுரை புறநகர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர், அந்த மாணவியை பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாகியது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் கோவில் பூசாரியை பிடித்து விசாரித்தனர். அப்போது சசிகுமார்(45) ஆட்டோ டிரைவராக இருந்து, பின்னர் அந்தப் பகுதியில் ஒரு கோவிலை அமைத்து அதற்கு நிர்வாகியாகவும், பூசாரியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் வறுமையை பயன்படுத்தி, படிப்புக்கு பணம் உதவி செய்வதாக கூறி கோவிலுக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற மாணவியை, அந்த பூசாரி கோவிலை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்ய வைத்துள்ளார். இதனை பயன்படுத்தி அவர் மாணவியை கர்ப்பமாகியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில் பூசாரியை கைது செய்தனர்.