காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தி.மு.க கட்சியின் கூட்டணியை உடைக்கவும், கலைக்கவும் நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி தான் மிகவும் வலிமையாக உள்ளது. வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர்  தலைமையிலான கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு, முதலில் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதற்கு மக்களவை, மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை வேண்டும். பாஜகவுக்கு இரு அவைகளிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சட்ட மசோதா கொண்டு வந்தால் தோற்கடிப்போம் என்று அவர் கூறினார்.