பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் கடந்த 19ம் தேதி அன்று இரவு கே ஆர் நகர் பகுதியில் இருந்து எலகங்கா பகுதிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தம் குறித்து விசாரித்துள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி இரண்டு பேர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதோடு தாலி செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிய ஓடினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கணேஷ் மட்டும் சரவணன் ஆகிய கூலி தொழிலாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.