இயக்குனர் சங்கர் அவர்கள் தளபதி விஜய் அவர்களுக்காக உருவாக்கிய ஸ்கிரிப்டுகளின் விவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தளபதி விஜய் அவர்களை வைத்து நண்பன் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட பின்பு மூன்று முறை அவருக்கென பிரத்தியேகமான ஸ்கிரிப்டுகளை தயார் செய்து விஜய் அவர்களை அணுகியுள்ளார். அந்த மூன்று ஸ்கிரிப்டுகளையும் விஜய் நடிக்க மறுத்துள்ளார். தற்போது அது என்னென்ன ஸ்கிரிப்டுகள் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில்,

1) தற்போது பிரபலமாக பேசப்பட்டு வரும் மல்டி ஸ்டார் ஸ்கிரிப்ட். இதில் பல பிரபல திரையுலக நட்சத்திரங்கள் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான கதை நடிகர் விஜய் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் விஜய் கதாநாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 2) ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த முதல்வன் திரைப்படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் 2017ல் தயார் செய்யப்பட்டது. 

3) 3D  தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு ஓர் Scince Fiction கதை விஜய் அவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இவை மூன்றிலும் நடிக்க விஜய் அவர்கள் மறுத்துள்ளார். தற்போது விஜய் அவர்களின் 70 வது படத்தை இயக்குனர் சங்கர் ஏற்க உள்ளார். தளபதி விஜய் அவர்களுக்காக மிகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ஸ்கிரிப்ட் ஓர் பொலிட்டிக்கல் திரில்லர் கதை எனவும், சங்கர் அதை எடுத்து கூறிய விதம் விஜய் அவர்களுக்கு பிடித்ததால் உடனடியாக ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் அவர்கள் ஏற்கனவே அரசியலில் நுழையப்போவதாக பல செய்திகள் வலம் வரும் நிலையில், அவரது 70 வது திரைப்படம் பொலிட்டிக்கல் திரில்லர் படமாக அமைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.