தலைவர் 171வது  திரைப்படத்திற்கான அப்டேட் ஒன்று  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே என்னென்ன சாதனைகள் படைக்கும் என ரசிகர்கள் அவர்களது கற்பனைகளில் பல சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர். இவ்வளவு ஓவர் கான்ஃபிடன்ஸ்க்கு காரணம் படத்தில் தளபதி விஜய் அவர்கள் மட்டுமல்லாமல், பிரபல நட்சத்திரங்கள் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளது தான்.

எத்தனை நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும் அவரவர்களுக்கான கதாபாத்திரத்தை முறையாக வடிவமைப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கமலஹாசன், பாஹத் பாசில் ஆகிய மூன்று மிகப்பெரிய நடிகர்களுக்கு சம அளவில் ஸ்கிரீன் ப்ளேவை பகிர்ந்து மாஸ் காட்டி இருப்பார். அதேபோல ஒரு சம்பவத்தை லியோவிலும் எதிர்பார்க்கலாம் என சினிமா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில், திரைப்படத்தில் நன்கு தெரிந்த 15 முதல் 20 ஹீரோக்கள் நடிக்க  தேர்வு செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எத்தனை திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஒரே நட்சத்திரமாக பளிச்சென்று மின்னும் சூப்பர் ஸ்டார் படமாக தரமான ஒரு செயலை யோகேஷ் கனகராஜ் செய்ய காத்திருக்கிறார் என சினிமா ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.