ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான டீசர் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜூலை மாதம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின்  ஜவான், விஜயின் தளபதி 70, தலைவர் 171, கமல்ஹாசனின் ப்ராஜெக்ட் கே, சூர்யாவின் கங்குவா, சிவகார்த்திகேயனின் மாவீரன், பிரபல ஹாலிவுட் இயக்குனர்   கிறிஸ்டோபர் நோலனின் ஓபன் ஹெய்மர்  என சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் வகையில், ஒவ்வொரு நாளும் அப்டேட் மழையாக தான் இருந்துள்ளது.

இப்போது இந்த வரிசையில் கோலிவுட்டின் நடிப்பு அசுரன் தனுஷ் அவர்களும் இணைந்துள்ளார். அவர் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மும்மடங்கு அதிகரித்தது. 

இதை தொடர்ந்து, ஜூலை 28ஆம் தேதி அவரது பிறந்த நாளன்று கேப்டன் மில்லர் படத்திற்கான டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டீசர் வருவதை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் அதை கொண்டாடும்  விதமாக வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக, தனுஷ் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் என  கூறும் வசனத்தை எடிட் செய்து இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.