சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா மீது நிதியிழப்பு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி உள்ள பதிவு ஒன்று தற்போது பெரும் பரப்பரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

​அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 பள்ளிகளுக்குப் பிரிண்டர் வாங்குவதற்காக மேயர் பிரியா தலைமையிலான நிர்வாகம் ₹60 லட்சம் மதிப்பில் திட்டம் தீட்டியுள்ளது. ஆனால், அதே 100 பள்ளிகளுக்குத் தேவைப்படும் பிரிண்டர்களைத் தவெக அரசு வெறும் ₹22 லட்சத்திலேயே வாங்கி முடித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரே தேவைக் கான செலவில் இவ்வளவு பெரிய நிதி வித்தியாசம் இருப்பது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் எதிரொலியாக, மேயர் பிரியா அறிவித்த புதிய 90 திட்டங்களையும் உடனடி செயல்பாட்டிற்குக் கொண்டு வராமல் முடக்கி வைத்துள்ள அரசு, அந்தத் திட்டங்கள் அனைத்தையும் விரிவான மறு ஆய்வுக்கு (Re-review) உட்படுத்த அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​ஏற்கெனவே சென்னை மாநகராட்சி உள்ளூர் வங்கிகள், உலக வங்கி மற்றும் ஜப்பான் வங்கி எனப் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் சுமார் ₹2,000 கோடி வரை கடன் சுமையில் தவித்து வரும் சூழலில், மக்கள் வரிப்பணத்தில் இதுபோன்ற திட்டங்களை அதிக விலைக்கு மேற்கொள்வது எந்த வகையில் நியாயம் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுகவைச் சேர்ந்த மேயர் பிரியாவின் இந்தச் செயல்பாடு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.