தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.