புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது “வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றினால் தங்களிடம் மனித வளம் இல்லை என கூறுவார். கல்வியால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும்” எனக் கூறி நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.