தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள் ஆவா். இதற்கு முந்தைய ஆண்டில் பொதுத்தோ்வில் கலந்துகொள்ளாத மாணவா்களின் எண்ணிக்கையானது  4 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டு அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ளாத 50,000 மாணவர்களை மீண்டும் தேர்வெழுத வைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 24, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வித்துறையின் மாநில இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி துணை தேர்வில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.