நடிகர் விக்ரமின் “ஐ” படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு வழங்கக் கோரி விநியோக நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. “ஐ” என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரிவிலக்கு வழங்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் கேளிக்கை வரிவிலக்கு பெறுவதற்கு தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் போதாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஷங்கர், விக்ரம் கூட்டணியில் உருவாகிய “ஐ” திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்து இருந்தது. அது தமிழ் வார்த்தை அல்ல என்று புதுவை தெரிவித்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் “அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தியாக வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.