இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமைகள், திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களும் அடங்கும். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். வங்கிகளுக்கு நேரில் சென்று நிதி பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது.