மே 1 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள 49வது லீக் ஆட்டத்தில் CSK – PBKS அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்கியது. பேடிஎம் மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் என்று பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. 1700 ரூபாய், 4000,6000 ரூபாய் விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.