
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, சினிமா கம்பெனியுடைய அறிவு இருக்கறதுனால, இந்த மாதிரி பாட்டு போட்டா தான்…. இதுல டிஎம்கேகாரங்களை அங்கு உள்ள உக்கார வைக்க முடியும். இவுங்க எல்லாம் குளோபல் இன்வெஸ்டர்ஸ் வந்து இருக்கிறாங்க. அவங்களுக்கு ஓ மாமா வரியா…. ஊ மாமா வரியான்னு ஸ்டேஜ்ல பாட வச்சா தான் எல்லாம் உட்காருவாங்க என்கிற அளவுக்கு ஒரு டிராமா கம்பெனியாக முழுவதுமாக மாறி இருக்கக்கூடிய திமுகவை இன்னைக்கு சமூக வலைத்தளம் வந்த பிறகு….
சமூக வலைத்தளம் பவர்ஃபுல்லான பிறகு…. மக்கள் கிழிச்சி மேஞ்சுக்கிட்டு இருக்காங்க…. டிஎம்கே பாத்தீங்கன்னா…… ரெண்டு நாள் லைட்டா சவுண்டு கொடுத்தாங்க… 6 லட்சத்து 60 ஆயிரம் இன்வெஸ்ட்மென்ட் வந்து இருக்கு…. 6 லட்சத்து அறுபதாயிரம் கோடி திராவிட மாடல் அரசினுடைய சாதனை…. தமிழ்நாடு அப்படி…. தமிழ்நாடு இப்படி..…
நாங்கள் கட்டிக் காத்து திராவிட கழகத்தை வளர்த்திருக்கின்றோம்.... அதற்கு சாட்சியாக 6,64,000 கோடி எங்களுக்கு வந்திருக்கிறது அப்படி என சொன்ன உடனே, நெஸ்ட் செகண்ட் நம்ம தலைவர்கள் சொன்னாங்க…. அப்படியா வாங்க பேசலாம்… 2023 பிப்ரவரி உத்தரப்பிரதேசத்தில் நடந்த இன்வெஸ்டர்ஸ் மீட்ல 33 லட்சம் கோடி ரூபாய் அங்க வந்திருக்கு. உடனே டிஎம்கேகாரன் கேட்டான்… அண்ணே கொஞ்சம் சத்தமா பேசுங்க காது கேட்கலை…
நீ என்னப்பா தம்பி சொன்ன… அண்ணே…. நம்ம ஊர்ல, நம்ம திராவிட மாடல் ஆட்சியில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி வந்துருக்குன்னு சொன்னோம். அதை அப்படியே அஞ்சால மல்டி பிளே பண்ணுப்பா…. எவளோ வருது ? அண்ணே ஒரு 32,000 கோடி. உத்தரப்பிரதேசத்தில் 33 லட்சம் கோடி ரூபாய் கடந்த ஆண்டு நடந்த குளோபல் இன்வெஸ்டர்ஸ் மாநாட்டில் யோகிஜி வாங்கி இருக்காரு என பேசினார்.