தமிழகத்தில் படிப்பதற்காகவும் வேலை செய்யவும் நகரங்களுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக சகி நிவாஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மிஷன் சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் கட்டப்படும். தங்குமிடம், உணவு, பாதுகாப்பு மற்றும் பகல் நேர பராமரிப்பு போன்ற வசதிகள் இதில் அமைத்து கொடுக்கப்படும். அதேசமயம் இதற்கான கட்டணமும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.