திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வீரலட்சுமி டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீசார் பிரதீப்பை வரவழைத்து கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் விஷம் குடித்து மயங்கி விழுந்த பிரதீப்பை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.