திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் பெரும் பரபரப்பு நிலவியது.
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி மூன்று பேருந்துகள் அடுத்தடுத்துச் சென்றுகொண்டிருந்தன. அப்போது, முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த மூன்று பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தின் வேகத்தில், ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்ததில் உள்ளே இருந்த பயணிகள் அலறித் துடித்தனர்.
இந்த கோரச் சம்பவத்தில் சுமார் 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
