ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி,   நான் ஒன்னே ஒன்னு சொல்லி முடிச்சிக்கிறேன்…. ஒரு இம்பார்டன்ட் விஷயம்…. அண்ணன் அனுமதிக்கணும்….  அவர் அடிக்கடி பேசுவாரு ஒரு சின்ன விஷயத்தை உங்கள் கிட்ட சொல்ணும். நடுவுல ஒரு நாள் அண்ணனே…  என்ன பண்ணாரு? ரெண்டு கோடி ரூபாய் அம்மா அவர்கள் கேட்டார்கள்,  நான் குடுத்தேன்…  அதை கையெழுத்திட்டு கொடுன்னு கேட்டாங்க, நான் வணங்கி அம்மா,  நீங்கள் கேட்டீர்கள்….  நீங்களா கேட்கிறீங்க என்று கேட்டு கொடுத்தேன்,

ஒரு ஒரு மாதத்தில்,  ஒரே மாதத்தில் அந்த பணத்தை திருப்பிக் கொடுத்தார் என்று சொன்னார்கள். அண்ணன் அவர்களுக்கு நினைவிருக்கிறதோ, இல்லையோ என்று தெரியாது. ஜேசிடி பிரபாகரன் சார் அங்க இருந்தாங்கன்னு நினைக்கிறேன். நான் இப்போது சொல்லுகிறேன் சரியான காரணத்தை….. ஏன் என்றால் எதுக்காக சொன்னார்னா, அவர் சொல்லத் தயங்குகிறார். நான் சொல்றேன்…. என்னன்னு கேட்டீங்கன்னா…  தலைமை கழகத்தில்  அண்ணனும் இருந்தாங்க,  எல்லாரும் இருந்தோம்.  அப்போ ஒரு நிருபர் கேட்கிறார்.

செக் கொடுத்தார், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துருக்கு, அம்மா யார் கொடுத்தாங்கன்னு கேட்டா….  அன்றைய தினம் பொருளாளராக இருந்த சீனிவாசன் கொடுத்தார்னு சொன்னாங்க. எந்த சீனிவான்,  இந்த உளறல் மன்னன் சீனிவாசன், திண்டுக்கல் சீனிவாசன்…. அப்போழுது அம்மாவுக்கு கோவம் வந்துடுச்சு . அவர்தான கொடுத்தாரு, செக் பவுன்ஸ் ஆகிருக்குல்ல,  அதை போட்டு நீங்க ஏதோ நடவடிக்கை எடுத்துக் கோங்க….  அவரோட பேசுங்க அப்படின்னு சொன்னாரு.

இன்றைய தினம் தலைமை கழகத்திலே இருக்கின்ற பணம் பல கோடி ரூபாய் பணம் அண்ணன கேட்டா தெரியும்….  எவ்வளவு கோடிணே….  மொத்தம் எவ்வளவு கோடி இருந்தது பணம் ? சொல்வீங்களா அடிக்கடி….  அவ்வளவு பணமும், அம்மா ஆணைக்கிணங்க அவரால் வந்த பணம். அந்தப் பணம் இன்றைய தினம் கட்சி காடு அடிப்பதற்காக ஊழல் நடந்திருக்கிறது. அப்ப திருடன் கையிலேயே போய் சாவியை கொடுத்தாச்சு.

சீனிவாசன் கையிலேயே போய் கையெழுத்து போடுனு கொடுத்தால் … அந்தத் தலைமை கழகத்திலே இருக்கின்ற பணம் நியாயமாக செயல்படுமா? அல்லது பணம் பயன்படுத்தப்படுகின்றதா? அண்ணா தொழிற்சங்க காடிலே பல கோடி மோசடி நடந்தது என்ற ஊழல் வழக்கும் வந்தது. ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் தான் அண்ணன் சொன்னார்.

அதை பொதுக்குழுவிலே…. செயற்குழுவிலே….  அம்மா சொல்ல சொன்னார்கள். இதுல என்ன பெரிய ஆராய்ச்சி கண்டுபிடிச்சிட்டானுங்க இவனுங்க? ஆகவே, அண்ணன் எதை பேசுகிறாரோ, அது நியாயமாக இருக்கும். எதை சொல்கிறாரோ,  அது தர்மமாக இருக்கும். எதை நாளைய தினம் கர்ஜிக்க போகிறதோ இந்த சிங்கம்,  அதுதான் வெற்றியாக மாறும் என்று சொல்லி, எனது உரையை முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என நிறைவு செய்தார்.