தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி ராவ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு நடிகர் ரஜினி நடிக்கும் ஜெய்லர் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அண்மையில் படக்குழு அறிவித்தது. இதன் காரணமாக தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 14-ஆம் தேதி மாவீரன் படம் ரிலீஸ் ஆகும் என படக் குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.