தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தின் தங்கலான் என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் விக்ரம் திடீரென விபத்தில் சிக்கியதால் அவருடைய விலா எலும்பு முறிந்தது. இதனால் நடிகர் விக்ரம் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைப் பார்ப்பதற்காக நடிகர் விக்ரமின் வீட்டுக்கு ரசிகர் ஒருவர் சென்றுள்ளார்.

அவர் விக்ரமின் வீட்டுக்கு முன்பு நின்று செல்பி எடுத்து அதை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை தன்னுடைய twitter பக்கத்தில் ஷேர் செய்த நடிகர் விக்ரம் உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி சிவா. நான் கண்டிப்பாக விரைவில் குணமடைந்து மீண்டும் சூட்டில் கலந்து கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார்.