ஐந்து ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபுவும் பேசி வருகிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்யவில்லை, கடன் வாங்குவதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக பொறுப்பேற்ற பிறகு 23 முதல் 25 வரை பெட்ரோல், மதுபானம் போன்றவை மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கும் மேலாக வருமானம் வந்துள்ளது.

அனால் கடன் குறையவில்லை. செந்தில் பாலாஜி என்னை அமைதிப்படை அமாவாசை என்று கூறுகிறார். ஆனால் அமைதிப்படை அமாவாசை பெயருக்கு பொருத்தமானவர் செந்தில் பாலாஜி அவர்கள் தான். சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளும் வேடந்தாங்கல் பறவையை போன்றவர்கள் தான் இவர்கள். செந்தில் பாலாஜி மற்றும் சேகர் பாபு போன்றோர் அரசியல்வாதிகள் அல்ல அரசியல் வியாபாரிகள். இவர்களெல்லாம் எங்களை பேசுவதற்கு எவ்வித தகுதியோ அருகதையோ கிடையாது என்று கூறினார்.