காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கர்நாடகா பாஜக தலைவரும் எம்பியுமான நளின்குமார் கட்டீல் சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். இவர் அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார். அந்த வகையில் கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு பொதுக்குழு கூட்டத்தில் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ராகுல் காந்தி மற்றும் சித்தராமையா இருவரும் விளையாடிய அரசியலை நாம் கவனித்து பார்க்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஆண்மை குறைவு ஏற்பட்டு குழந்தை பிறக்காது என ராகுல் காந்தியும், சித்த ராமையாவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அதே நாளில் ராகுல் காந்தி இரவில் திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதனால்தான் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் ராகுல் காந்திக்கு குழந்தை பிறக்காது என்பது தெரிந்திருந்ததால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இந்த பேச்சு சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.