போதைப் பொருட்கள் ஒழிப்பில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்திட வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும்.

காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான ஆவணப் பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதோடு போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தி பரிசு வழங்கிய சென்னை காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.