தெற்கு ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலி- தாம்பரம் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது.‌ இந்த சிறப்பு ரயில் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் நாளை (மார்ச் 26) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணியளவில் மதுரையை சென்றடையும். பின்பு மதுரையில் இருந்து 8.40  மணிக்கு புறப்பட்டு மார்ச் 27-ம் தேதி காலை 6.15 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த ரயிலில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.