தோனியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என ஷேவாக் தெரிவித்துள்ளார். தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டிய சேவாக், மற்ற சென்னை வீரர்கள் தோனி அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றார். சிஎஸ்கேவின் வெற்றி மற்றும் தோல்வியை காட்டிலும் தோனி ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கியம் என்ற சேவாக், அந்தப் பணியை அவர் சிறப்பாக செய்து வருவதாகவும் பாராட்டியுள்ளார்
